லண்டன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் மோசமான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மகன்கள் சுலைமான் கான், காசிம் கான் குற்றம்சாட்டி உள்ளனர். 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல கேப்டனாக வழிநடத்திய இம்ரான் கான், பின்னர் அந்நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு. 2023 -ல் அவர் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார். பேட்டி இம்ரான்கானின் மகன்கள் சுலைமான் கான், காசிம் கான் தற்போது இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மைக்கேல் ஆதர்டனிடம் அளித்த பேட்டியில் அவர்கள் இந்த குற்றச்சாட்டை அளித்துள்ளனர். இந்த பேட்டி இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடக்கும் 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் மதிய உணவு இடைவெளியில் தனியார் தொலைக்காட்சியின் மூலம் இந்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது. சித்தரவதை பேட்டியில் தனது தந்தையின் ஒரு கண்ணில் சுமார் 80% சதவீத பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவரை பார்க்கும்போது கண்ணீல் கட்டுடன் காணப்பட்டார். அவரை தினமும் 23 மணி நேரத்திற்கும் மேலாக சிறிய அறையில் தனிமையிலேயே அடைக்கப்பட்டு கடும் கட்டுபாடுகளுடன் அடைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். சிறையில் பிரதமருக்கு வழங்கபடும் வசதியை அளிக்கவில்லை. வழக்கமாக வழங்கும் வசதிக்கூட வழங்க மறுக்கப்பட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கொலை முயற்சி மேலும், அவரை சிறையிலேயே கொல்ல முயற்சிப்பதாக தெரிகிறது என்று காசிம் கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அடுத்து அவர் கூறுகையில், தந்தையின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் மிகவும் அச்சத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார். முறையாக அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். நீதிமன்றம் உத்தரவு அளித்ததின் பேரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஒரு மணி நேரம் பரிசோதனை நடைபெற்று அதன்பிறகு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு முன்பு இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் முன்னாள் சர்வதேச கேப்டன்களும் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/attempt-to-kill-former-pak-pm-imran-in-prison-sons-make-sensational-allegations




