சென்னை, ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து காணொலி ஒன்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நிலத்தை அழிக்கலாமா? வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா? ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம். ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம். காணொலி பதிவு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்? அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்? அறிந்து கொள்ளுங்கள். இந்தக் காணொலியிலிருந்து. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா? ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/can-we-destroy-pallikaranai-marshlands-gift-of-nature-anbumani




