புதுடெல்லி, கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி, தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து இன்று இந்தியாவின் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். நடுவானில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் சுமார் 300 அடி கீழே சரிந்தது. இதனால் சில பயணிகள் முன்னால் உள்ள இருக்கைகள் மீது மோதினர். மேலும், பயணிகள் பலரும் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் விமானம் சமநிலைக்கு வந்து, பத்திரமாக டெல்லியில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் 24 பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தியது. இதன்படி முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தின்போது தலைமை விமானி சுதீப் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையை ஏற்று, தலைமை விமானி சுதீப்பை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/drug-use-incident-air-india-pilot-dismissed




