கிருஷ்ணகிரி, காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம், மோட்டார் போக்குவ ரத்து தொழிலாளர் சட்ட விதிகளின்படி, தேசிய விடுமுறை தினத்தில், கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அதற்கான நகலை தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி காந்தி ஜெயந்தியன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகர் தலைமையில், 38 கடைகள், 44 உணவு நிறுவனங்கள் மற்றும் 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 88 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 26 கடைகள், 37 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 63 நிறுவனங்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/action-against-63-companies-for-not-giving-workers-a-day-off-on-gandhi-jayanti



