மைசூரு, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்துவிடப் படும் தண்ணீர் அளவு 5,200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழை குறைந்தது கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கே.ஆர்.எஸ். அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் மற்றும் கேரளம் மாநிலம் வயநாடு ஆகிய மாவட்டங்கள் உள் ளன. இந்தநிலையில் தற்போது குடகில் மழை பொழிவு முற்றிலுமாக நின்றுவிட்டது. இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. அந்தவகையில் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 106.84 அடி யாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 511 கனஅடி யாக இருந்தது. வெளியேற்றம் வினாடிக்கு 4 ஆயிரத்து 80 கனஅடியாகவும் உள்ளது. தண்ணீர் குறைப்பு இதேபோல் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி சுமார் 50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 514 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இரு அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 200 கனஅடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 11 ஆயிரத்து 983 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/reduction-in-release-of-water-from-karnataka-dams-to-tamil-nadu-in-cauvery




