லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த இளைஞர் அமித். இவர் பிலிங்கிட் நிறுவனத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் இந்நிலையில், மீரட்டின் பஹ்வான் பகுதியில் பொருளை டெலிவரி செய்ய நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது, வாடிக்கையாளரின் கதவை திறக்க காலிங் பெல் அடித்துள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்து வந்த நபர் பொருளை கொண்டுவர இவ்வளவு நேரமா? எனக்கூறி அமித் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அமித்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, தன்னை தாக்கிய நபர் மீது அமித் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டெலிவரி ஊழியரை தாக்கிய வாடிக்கையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/customer-brutally-assaults-delivery-worker-shocking-incident




