கொல்கத்தா, திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்காளத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதாவிடம் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்த தோல்வியை தொடர்ந்து, தேர்தல் நிதியை தங்கள் கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக கட்சிக்குள் தலைவர்களிடையே உட்கட்சி மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து, அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கொல்கத்தா போலீசாரிடம் ஒரு புகார் அளித்தனர். அதில், “கட்சியின் வங்கி கணக்குகளில் உள்ள பல நூறு கோடி ரூபாய் பணத்தின் ஆதாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதில் சட்டவிரோத பண வசூல் மற்றும் நேர்மையற்ற நிதிப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன” என்று குற்றம் சாட்டினர். அமலாக்கத்துறை இந்த புகாரின் அடிப்படையில், கொல்கத்தா சைபர் குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்டமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 3 வங்கி கணக்குகளையும் முடக்கி நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையே, இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் தீவிர விசார ணையில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் உள்ள 'கேர்வெல் ஏவியேஷன்' என்ற ஹெலிகாப்டர் நிறுவனம் உள்பட 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து, பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான 3 வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது. இந்த கணக்குகளில் மொத் தம் ரூ.440.42 கோடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சொகுசு விமானம். அமலாக்கத்துறையின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2023 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கணக்கில் இருந்து ரூ.160 கோடி கைமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொகையைக் கொண்டு சொகுசு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வாங்கப்பட்டு, பின்னர் அவற்றை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே வாடகைக்கு விட்டது போல போலியான கணக்குக் காட்டி கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/trinamool-congress-partys-rs-440-crore-frozen-enforcement-department-action




