சென்னை, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தவறான தகவல் பரவி வருவதாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பரவும் செய்தி! ஏற்கனவே ரூ.8,000-ஆக உள்ள மீன்பிடி தடைக்கால நிவாரணம், ரூ.7,000-ஆக தமிழ்நாடு அரசு குறைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. உண்மை என்ன? இது முற்றிலும் தவறான தகவல். மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை (Ban Period Assistance) ரூ.8,000 தொடர்ந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2026 - 2027 பட்ஜெட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (Lean Period Fishing Assistance) ரூ.6,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-relief-amount-for-the-fishing-ban-period-been-reduced-government-clarification




