இரா.சரவணன் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற ‘நந்தன்’ படத்தின் 2வது பாகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான ‘அயோத்தி’, ‘கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இயக்குநர் இரா.சரவணன் ‘கத்துக்குட்டி’,‘உடன் பிறப்பே’ போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் ‘நந்தன்’ படத்தை இயக்கியிருந்தார். ஸ்ருதி பெரியசாமி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். சாதிய கொடுமைகள் பற்றிய திரைப்படம் கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி ‘நந்தன்’ திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் பேசிய இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரது பாராட்டுகளை இப்படம் பெற்றது. “நந்தன்” படத்தின் 2வது பாக அறிவிப்பு முதல் பாகம் வெளியாகி இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ‘நந்தன் 2’ படத்தின் அறிவிப்பை இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்டுள்ளார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் யார் நடிக்கவிருக்கிறார் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. ‘நந்தன்’ ரிலீஸாகி 2 வருசம் ஆச்சு… அடுத்த படம் என்ன சார்? — இரா.சரவணன் (@erasaravanan) September 20, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/director-ra-saravanans-nandhan-film-part-2-announced




