கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டருக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி சுரேஷ் கோபி கூறினார். முன்னதாக ஈரான் - அமெரிக்கா போரால் சமையல் கியாஸ் எனப்படும் எல்பிஜி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் வணிக சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டருக்கான முன்பதிவு காலமும் அதிகரிக்கப்பட்டது. நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கால இடைவெளி முடிவடைவதற்கு முன்பு சிலிண்டரை மீண்டும் முன்பதிவு செய்ய முடியாத வகையில் நடைமுறை இருந்தது. இந்த நிலையில், எல்பிஜி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிராமப்புற நுகர்வோருக்கும் கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் இனி 25 நாட்கள் இடைவெளியில் கேஸ் புக்கிங் செய்து கொள்ள முடியும். அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இந்த விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/restrictions-on-gas-cylinders-in-rural-areas-relaxed-central-government-order




