லண்டன், இங்கிலாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் கடினமான வழக்கறிஞர் பணியை விட்டுவிட்டு, நாய் நடைப்பயிற்சி செய்யும் தொழிலைத் தொடங்கி, முன்பு ஈட்டிய வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக சம்பாதித்து வருகிறார். பணி அழுத்தம் இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு தெற்கே அமைந்துள்ள மேற்கு சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லிஸ் ஈஸ்ட் (வயது 30). இவர் கிரிமினல் தற்காப்பு வழக்கறிஞராகவும் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தினமும் 12 மணி நேரத்திற்கும் மேலான வேலைப்பளு, கடுமையான மன அழுத்தம் மற்றும் நீண்ட தூரப் பயணம் காரணமாகத் தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட அவர் முடிவு செய்தார். புதிய தொழில் மாற்றம் விலங்குகள் மீது கொண்ட அன்பின் காரணமாக, அவர் முழுநேர நாய் நடைப்பயிற்சியாளராக தனது புதிய பயணத்தைத் தொடங்கினார். இத்தொழில் மூலம் அவர் ஆண்டுக்கு 'ஆயிரக்கணக்கான' டாலர்கள் அதிகமாகச் சம்பாதிக்கிறார். வழக்கறிஞர் பணியில் இருந்த வேலை நேரத்துடன் ஒப்பிடும்போது, இப்போது அவர் பாதியளவு நேரமே வேலை செய்கிறார். ஒரு நாளைக்கு 4 முறைகளாக மொத்தம் 20 முதல் 30 நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார். இதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் $400 முதல் $530 வரை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.50,000) அவர் வருமானம் ஈட்டுகிறார். இவரது கணவரும் நாய் நடைபயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மன நிம்மதியும் சுதந்திரமும் ஒரு நாய்க்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.1,800 வரை கட்டணம் வசூலிக்கும் அவர், இந்த புதிய தொழிலில் அதிக மனநிறைவும், சுதந்திரமும் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். "வாழ்க்கை மிகவும் சிறியது; உங்களுக்கு பிடிக்காத ஒரு வேலையில் இருந்து கொண்டு உங்களை நீங்களே வருத்திக்கொள்ளாதீர்கள்" என்று அவர் மற்ற இளைஞர்களுக்கு தனது அனுபவத்தின் மூலம் உத்வேகம் அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/woman-quits-legal-career-to-venture-into-dog-rearingearns-double-the-income




