புதுடெல்லி, மகளிர் டெல்லி பிரீமியர் லீக் (WDPL) தொடரின் தொடக்கப் போட்டியில், சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேதாவி பிதூரி விக்கெட் வீழ்த்திய பின்னர் செய்த வித்தியாசமான ‘67’ செலிப்ரேஷன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான ‘67’ செலிப்ரேஷன் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நடப்பு சாம்பியனான சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் - சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணிகள் மோதின. இதில் சவுத் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 16-வது ஓவரை மேதாவி பிதூரி வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் நிஷிகா சிங் அடித்த பந்தை ஆருஷி கோயல் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதைத் தொடர்ந்து, மேதாவி பிதூரி தனது ஜெர்சியின் ‘67’ எண்ணை வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான செலிப்ரேஷனை செய்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சவுத் டெல்லி அணி வெற்றி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. பின்னர் 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செப்டம்பர் 2 வரை தொடர் மகளிர் டெல்லி பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் நேற்று முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறுகிறது. தொடரின் அனைத்து போட்டிகளும், புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்நிலையில், முதல் போட்டியிலேயே மேதாவி பிதூரியின் ‘67’ செலிப்ரேஷனை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/wdpl-2026-medhavi-bidhuris-67-celebration-goes-viral-after-dismissing-nishika-singh-in-season-opener




