சென்னை, இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் சூரி, சுஹாஸ் இணைந்து நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தின் அதிரடி டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. கதாநாயகனாக உயர்ந்த சூரி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில், கருடன், விடுதலை, கொட்டுக்காளி, மாமன் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘மண்டாடி’ என்ற திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் மதிமாறன் இயக்கியுள்ளார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகுப் போட்டிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சுஹாஸ் ‘கலர் போட்டோ’, ‘ரைட்டர் பத்மபூஷண்’, ‘அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான தெலுங்கு நடிகர் சுஹாஸ், ‘மண்டாடி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 10-ல் ரிலீஸ் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து "மண்டாடி மண்டாடி", "உசுரே நீதான் புள்ள" என்ற பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தன. "யு/ஏ" சர்டிபிகேட் இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மத்திய தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு "யு/ஏ" சர்டிபிகேட் வழங்கியுள்ளது. எனவே இந்த படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாகத் திரையரங்குகளில் பார்க்க முடியும். 12 வயதுக்கும் குறைவான குழந்தைகள் பார்க்கும்போது பெற்றோர்கள் அருகில் இருந்து வழிகாட்டுவது நல்லது. வெளியான அதிரடி டீசர் இந்த நிலையில், படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் அதிரடி டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. Here, we present to you the world of. Teaser is here! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sooris-next-big-move-here-is-the-action-packed-teaser-of-the-movie-mandadi




