தேவையான பொருட்கள்: இட்லி – 8 முதல் 10, தயிர் – 1 டம்ளர், பச்சை மிளகாய் – 2, தேங்காய் – 1 பத்தை, சீரகம் – ½ டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை – தேவையான அளவு, காராபூந்தி – தேவையான அளவு (அலங்கரிக்க). செய்முறை: முதலில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை தயிரில் சேர்த்து நன்றாகக் கடைந்து, மிருதுவான கலவையாக தயாரித்துக் கொள்ளவும். இட்லிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, தயார் செய்துள்ள தயிர் கலவையில் சேர்த்து மெதுவாகக் கிளறவும். பின்னர் மேலே நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவவும். பரிமாறும் முன் காராபூந்தியை மேலே தூவி பரிமாறினால், தயிர் இட்லி மேலும் சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். குறிப்பு: இட்லியை நீண்ட நேரம் தயிரில் ஊறவைத்தால் அது குலைந்து விடும். எனவே பரிமாறுவதற்கு 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்புதான் தயிர் கலவையை இட்லியுடன் சேர்ப்பது சிறந்தது. மணமணக்கும் பூண்டு குழம்பு செய்வது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/how-to-make-tasty-curd-idli




