நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடும் கரப்பான் பூச்சி கட்சியின் இளைஞர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருக்கிறார். டெல்லி போராட்டம் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், "புதுடெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இப்போது நாடு முழுவதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டெல்லி போராட்டம்: "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" - ஆதவ் அர்ஜுனா NEET பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று முதன்முதலில் எச்சரித்தது நாங்கள்தான். நீட் தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, திமுக ஆரம்பத்திலிருந்தே அதை எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/dmk-stalin-support-delhi-cjp-neet-protest




