திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர்- 6- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க தரப்பு வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா களத்தில் உள்ளார். அவரை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே. என் நேரு அண்மையில் தாராபுரம் தொகுதிக்கு வருகை தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க- வின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தாராபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், தி.மு.க நிர்வாகிகள் இருவரின் வீடுகளில் இருந்து இன்று சுமார் 48 லட்சம் ரூபாய் பணம் ரொக்கமாக தேர்தல் பறக்கும் படையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இந்த பணம் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் பறிமுதல் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஒருவர், " எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் ஒன்றியம் தாளக்கரை பிரிவில் உள்ள தி.மு.க நிர்வாகிகளான விஸ்வநாதன், செல்வராஜ் ஆகியோரது வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டோம். முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ48,42,550 -ரூபாய் ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்த தொகையும் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/election/tharapuram-constituency-flying-squad-secure-48-lack-rupees-amount-for-out-of-documents-in-dmk-deligate-houses




