சென்னை, ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கு உதவிய புகாரில் பிரகாஷ் என்பவருக்கு சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகனான பிரகாஷ் தற்போது வெளிநாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் உள்ளதாக கூறப்படும் பிரகாஷ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வீரமணி மீதான பாலியல் வழக்கு தொடர்பாக அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ரூ.70 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. வழக்கின் முழுவிவரம்:- ஜெம் வீரமணி சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக் டோபர் 6-ந்தேதி அன்று விபசார தடுப்பு பிரிவு போலீசாரிடம் பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில் அவர், பிரபல தொழில் அதிபரான 'ஜெம் கிரானைட்ஸ்' உரிமையாளர் வீரமணி, சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட 'வீடியோ' காட்சிகள் அடங்கிய 'பென்டிரைவ்'வையும் கொடுத்து சென்றார். புகாரின்பேரில் அப்போது விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வருகிறது. பாலியல் துன்புறுத்தல் அந்த வகையில் தொழில் அதிபர் வீரமணி மீதான வழக்கை சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீ சார் விசாரணையில் இறங்கினார்கள். விசாரணையில் தொழில் அதிபர் வீரமணி, அறக்கட்டளை ஒன்றை தொடங்கி ஏழை-எளிய குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்து வந்துள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த உதவிக்கு கைமாறாக 13 முதல் 18 வயது வரையிலான பல சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்டு மாதம் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் இந்த வழக்கு தொடர்பான 'வீடியோ' ஆதாரங்கள், சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்தது. புரட்டி போட்ட டைரி இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தொழில் அதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரையும் 'போக்சோ' சட்டத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி அன்று அதிரடியாக கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து புழல் சிறையில் வீரமணியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோர் 3 நாட்கள் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெற்றனர். இதற்கிடையே வீர மணியால் பாதிக்கப்பட்டதாக 9 சிறுமிகள் அடுத்தடுத்து புகார் மனு அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வீரமணி தொழில் அதிபர் என்பதால் ஒவ்வொரு வரவு- செலவு கணக்குகளையும் டைரியில் எழுதி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவரை கைது செய்த போது அவருடைய வீட்டில் இருந்து டைரியை போலீசார் பறிமுதல் செய்தி ருக்கிறார்கள். அந்த டைரியை போலீசார் புரட்டி பார்த்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. ரூ.70 கோடி தன் மீது இந்த புகார் எழுந்தவுடன் தன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யாமல் இருப்பதற்காக வீரமணி போலீஸ் அதிகாரிகளுக்கு வங்கி கணக்கு மூலம் எவ்வளவு பணம் லஞ்ச மாக கொடுத்தார் என்ற விவரங்கள் பட்டியல் போடப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் தவிர்த்து அரசியல் கட்சி பிரமுகர்களுக் கும் வீரமணி கோடிக்கணக்கில் பணத்தை வாரி இரைத்துள் ளார். இதற்காக அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஊட்டியில் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்து ரூ.70 கோடியை போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட் சியை சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்து அளித்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணை அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மூலம் அரசியல் கட்சி பிரமுகர்கள் வரை யில் அடுத்தடுத்து சிக்குவார்கள் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு தனிப்படை அமைத்து போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-summon-prakash-in-gem-veeramani-pocso-case




