தூத்துக்குடி, தூத்துக்குடி மீளவிட்டான் காமராஜ் நகரில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 3-வது நாளாக நடந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தூத்துக்குடி மீளவிட்டான் காமராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றைத் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த செய்தி பரவியதைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என்றும், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் சென்று வரும் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறி அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் காத்திருப்பு போராட்டம் இந்த பகுதியில் புதிய கடை திறக்கக்கூடாது என வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சந்தனராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர். பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-womens-protest-enters-3rd-day-demanding-permanent-removal-of-tasmac-shop




