நியூயார்க், ஜோகோவிச்சை வீழ்த்தியது தன் வாழ்வின் மிகச்சிறந்த நாள் என்று நவோன் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை, அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில் நவோன் 7-6(5), 5-7, 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 2006-க்கு பிறகு முதல் முறை இந்த தோல்வியின் மூலம், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் முதல் சுற்றிலேயே ஜோகோவிச் வெளியேறினார். ஜோகோவிச் எனது முன்மாதிரி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு பேசிய நவோன் கூறுகையில், “இது நம்ப முடியாத மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே ஜோகோவிச்சை எனது முன்மாதிரியாக நினைத்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் உலக தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் கூட இல்லை. அதனால், 2023-ம் ஆண்டு வரை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்போது 2026-ம் ஆண்டில், நான் விளையாடிய சிறந்த மைதானங்களில் ஒன்றான ஆர்தர் ஆஷ் மைதானத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தியிருப்பது நம்ப முடியாத அனுபவமாக உள்ளது. இந்த வெற்றியால் அர்ஜென்டினாவில் உள்ள எனது குடும்பத்தினரும் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்” என்றார். சிறந்த நாள் ஐந்தாவது செட்டில் ஜோகோவிச்சுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறிய நவோன், “அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இருந்தாலும், இது என் வாழ்வின் சிறந்த நாள்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/tennis/best-day-of-my-life-navone-reacts-after-defeating-djokovic-at-us-open




