சென்னை, குறைந்த விலையில் தங்க காசு மற்றும் நிலம் வாங்கி தருவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் பணம் வசூலித்து ரூ.20 கோடி மோசடி நடந்ததாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் விசாரணை இந்த வழக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி, அவருடைய உறவினர் பிரபு மணி மற்றும் கல்பனா, செந்தில்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி ஆகிய 3 பேர்களிடமும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது. அதன்பேரில் அவர்கள் 3 பேர்களிடமும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-coin-scam-case-female-inspector-granted-police-custody-for-questioning




