புதுடெல்லி, சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வீரர் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் இருந்த சீனாவின் ஷி யுகி 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பி யன்ஷிப்பில் முதல் சுற்றுடன் வீழ்ந்ததால் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளார். இந்தோ னேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி இரு இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 13-வது இடத்திலும் (ஒரு இடம் அதிகரிப்பு). ஆயுஷ் ஷெட்டி 20-வது இடத்திலும் (இரு இடம் உயர்வு) உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தென்கொரியாவின் அன்சே யங் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் பி.வி.சிந்து 9-ல் இருந்து 10-வது இடத் துக்கு பின்தங்கினார். உன்னதி ஹூடா 25-வது இடத்திலும், தன்வி ஷர்மா 26-வது இடத்தி லும் உள்ளனர். பெண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் திரிஷா ஜாலி காயத்ரி கோபிசந்த் ஜோடி 12 இடங்கள் எகிறி 27-வது இடத்தை பெற்றுள்ளனர். உலக பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்ததன் மூலம் இந்த ஏற்றம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/badminton-rankings-trisha-gayathri-pair-moves-up




