சென்னை, சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கலாவதி என்ற பெண் உயிரிழந்தார். சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த கனமழையால் பள்ளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக வந்த பெண் ஒருவர் கவனிக்காத நிலையில், தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவர் பெயர் கலாவதி என்று தெரிய வந்துள்ளது. அவர் பள்ளத்தில் விழுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளத்தின் அடியில் மின் வயர்கள் சென்றதால் மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. பள்ளத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இது குறித்து அரசின் அலட்சியத்தால் தாய் உயிரிழந்துவிட்டதாக கண்ணீருடன் மகள் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பள்ளத்தை சுற்றி தடுப்புகள் இல்லை. மின்வாரிய பண் இநடப்பது குறித்து எச்சரிக்கை இல்லை. அரசின் அலட்சியத்தால் எனது தாய் கலாவதி உயிரிழந்துள்ளார் என கண்ணீர் மல்க கூறினார். பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என மக்கள் வேதனை தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-falling-into-rainwater-drainage-ditch-in-anna-nagar




