டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். வழியில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனத்தில் சென்றபடியே இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கல்யான்புரி என்ற இடத்தில் வந்தபோது திடீரென மனீஷ் தனது வாகனத்தை நிறுத்தினார். வண்டியை நிறுத்திய பிறகும் இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது. அவர்கள் நடுரோட்டில் நின்றபடி வாக்குவாதம் செய்ததை பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் ஆத்திரத்தில் மனீஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தனது ஸ்கூட்டரில் கிளம்பிச் சென்றுவிட்டார். சம்பவம் நடந்த இடம் பிரியங்கா நடுரோட்டில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பிரியங்காவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இதையடுத்து அவடீ உடல் பிரேத பரிசோத்னைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மனீஷை தேடி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பிரியங்காவிற்கு இன்று பிறந்தநாள் ஆகும். போலீஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி இது போன்று சண்டை ஏற்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மனீஷை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸார் இருவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/argument-while-riding-a-scooter-delhi-policeman-shoots-wife-dead-in-the-middle-of-the-road-and-flees




