தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தங்கள் தேர்தல் வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யவேண்டும். அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்களின் தேர்தல் செலவீன பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளன. அதிகபட்சமாக திமுக ரூ.197 கோடியும், அதிமுக ரூ.112 கோடியும் செலவு செய்து இருப்பது தெரியவந்தது. தற்போது தவெக தாக்கல் செய்த செலவு கணக்கு விவரங்களும் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் தேர்தலுக்காக ரூ.19.8 கோடி செலவு செய்துள்ளது. 10ல் ஒரு பங்கு திமுக செலவு செய்துள்ள ரூ.197.84 கோடியுடன் ஒப்பிடுகையில் 10ல் ஒரு பங்கு மட்டுமேயாகும். தவெக செலவிட்ட மொத்த தொகையில், விளம்பரத்திற்காக ரூ.6.34 கோடி, விஜய்யின் விமான பயண செலவு ரூ.3.54 கோடி, பிரசார பொருட்கள் ரூ.40.54 லட்சம், பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ செலவு ரூ.2.06 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவுகள் ரூ.7.02 தேர்தல் காலத்தில் அனைத்து வழிகளிலும் கிடைத்த வரவுகள் ரூ.7.02 கோடியாகும். தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கட்சியின் தொடக்க கையிருப்பு ரூ.3.03 கோடியாக இருந்தது; தேர்தல் காலத்தில் கட்சிக்குக் கிடைத்த வரவுகள் ரூ.7.02 கோடியாக இருந்தன. சட்டமன்ற தேர்தலில் தவெக 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இதில், 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/2026-assembly-election-tvk-spent-198-crore-manifold-less-than-dmk




