தேனி, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் ‘போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி’ இன்று நடைபெற்றது. இதனை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்ததோடு, பேரணியிலும் பங்கேற்றார். உத்தமப்பாளையம் நகர் முழுவதும் நடைபெற்ற இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில், பள்ளி மாணவர்கள், ஸ்கேட்டிங் மாணவர்கள், ரோட்டரி கிளப் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள், இளைஞர்கள் போதை பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும், போதைக்கு அடிமையாக கூடாது, சிறுவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும், விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-drug-awareness-rally-in-theni-mla-jaganath-mishra-flags-it-off




