சென்னை, சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அலுவலக பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-ந் தேதி ஆகிய நாட்களில் ரெயில் தண் டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே இருமார்க்கமும் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில்கள் ரத்து காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மின்சார ரெயில் ரத்தால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன், சிலர் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி சாலைகளில் பயணம் செய்வதால் தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/electric-trains-cancelled-severe-traffic-congestion-on-gst-road-tambaram




