டோக்கியோ ஜப்பான் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்து உள்ளது. தென்மேற்கு ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் குமாமோட்டோ பகுதி அமைந்துள்ளது. இரவு பகலாக மீட்பு பணி இதனை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. பலர் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காஷிமா நகரில் உள்ள 'ஏயான் மால்' வணிக வளாகத்தின் இரண்டாவது தளம் இடிந்து விழுந்ததில் பலர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர். 'நிப்பான் பேப்பர் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் யாட்சுஷிரோ ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெப்ப பாதிப்புகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குமாமோட்டோ மற்றும் அண்டை மாகாணமான நாகசாகியில் வசிக்கும் சுமார் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறும்படி தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை அறிவுறுத்தியுள்ளது. நிலநடுக்க பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள ஆயிரக்கணக்கானோர், அதிக வெப்ப பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/japan-earthquake-death-toll-rises-to-34




