சென்னை, சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்துள்ள மனுவில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 30-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை இருசக்கர வாகனத்தில் மாநிலம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்ள முடிவு செய்தோம். இதற்காக அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தோம். அவர், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் மனு அளித்து அனுமதி பெற்றுக்கொள்ளும்படி கடந்த மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டார். இதன்படி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால், அனுமதி மறுத்து ஜூலை 29-ந்தேதி போலீசார் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகளை ரத்து செய்து, பிரசாரத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுவுக்கு பதில் அளிக்கும்படி டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-denied-for-dravidar-kazhagams-two-wheeler-rally-high-court-orders-dgp-to-respond




