லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கணவன் - மனைவி சண்டை உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49) இவரது மனைவி பெயர் பிரித்தி தேவி (வயது 45) இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. அவதேஷ் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தநிலையில், நேற்று இரவு 100 ரூபாய் பணம் தொடர்பாக கணவன் - மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் மனைவியை அவமானப்படுத்தியதாக தெரிகிறது. வீட்டில் இருந்து புகை இதனால் கோபத்தில் இருந்த பிரித்தி தேவி, கணவர் கட்டிலில் தூங்கி கொண்டிருக்கும் போது அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். நள்ளிரவில் திடீரென வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். போலீசார் வருவதற்குள் அவதேஷ் உடல் தீ பற்றி எரிந்து கரிக்கட்டையானது. பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைது முதலில் தற்கொலை என நாடகமாடப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெட்ரோல் பாட்டில் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மனைவி பிரித்தி தேவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.100 பணத்திற்காக கணவரையே மனைவி தீ வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/a-fight-over-rs-100-wife-pours-petrol-on-husband-and-sets-him-on-fire




