கோவை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், உண்மையான முகத்தை பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தையும், மகனும் உள்ளே இருக்கும் உண்மையான முகம் என்னவோ? விரக்தியின் உச்சத்தில் தன்னிலை மறந்து பேசி இருக்கிறார். இனிமேல் அவர்களுக்கு தோல்வி மட்டும்தான், வெற்றியே கிடையாது. இந்த வயதிலும் இவ்வளவு மோசமாக ஒரு பட்டியலினப் பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசியிருக்கிறார். தி.மு.க-வினர் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவர்கள். எனவே தான் அவர்களை ‘தீய சக்தி தி.மு.க’ என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறோம். அவர்கள் சமுதாயத்தில் இருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள். நிர்மல்குமார் நாங்கள் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை. அந்தப் பழக்கம் எங்கள் கட்சிக்கும் இல்லை. தி.மு.க-விடமிருந்து தவறான தகவல் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சென்றுள்ளது. அது போன்ற முயற்சி செய்ய வேண்டிய அவசியம்கூட எங்களுக்கு கிடையாது. எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் செய்த ஒரே கட்சி த.வெ.க. இந்த தீவிர வாக்காளர் சீர்திருத்தம் சரியாக நடைபெற்றிருந்தால் 160 தொகுதிகளில் கூட வெற்றி பெற்று இருப்போம். தி.மு.க ஒன்றிய அரசுடன் கூட்டணி வைத்து தவறான நடவடிக்கை மேற்கொண்டதால்தான், அவர்கள் இந்த அளவுக்காவது வெற்றி பெற்றார்கள் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் கூட்டத்தில் த.வெ.க அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்றே தெரியாமல் பேசி வருகிறார். தரம் தாழ்ந்து ஒரு தலைவர் மூன்றாம் தர நபர், நான்காம் தர நபர் போன்று பேசி வருகிறார். அதுதான் அவர்களுடைய ஒரிஜினல் முகம். தி.மு.க-வின் அத்தியாயம் இத்துடன் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அ.தி.மு.க தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலைமைதான் தி.மு.க-விற்கும் ஏற்படும். இந்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் டெபாசிட் வாங்குவதே மிகவும் கடினம். தற்போது உள்ள அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கட்சியை இன்று முட்டுச்சந்திற்கு கொண்டு போய் நிறுத்திவிட்டார். இந்தத் தேர்தலிலாவது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவரை மாற்றுவார்களா என்று அவரது கட்சியினரே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கும் எந்த ஒரு வெற்றியும் கிடைக்கப் போவதில்லை. அடுத்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போகிறார்கள். மூன்று பேர் சேர்ந்தாலும் டெபாசிட் கிடைக்காது. நெய்வேலியில் இருந்து ஒன்றியத் தொகுப்புக்கு வரும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது. அதனால் தற்காப்பிற்காக ஜெனரேட்டரைப் பயன்படுத்துமாறு தான் கூறியிருக்கிறோம். தொழில்துறையினருக்கு எந்த ஒரு மின்சாரத் தடையும் நாங்கள் செய்யவில்லை. தற்காப்பு காரணமாகவே ஒரு சில பகுதிகளில் அதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஒரு சாட்டேஜ் காரணமாக கடந்த வாரத்தில் ஓரிரு இடங்களில் ஒரு மணி நேரம், அரை மணி நேரம் மின் நிறுத்தம் இருந்தது. இருந்தபோதிலும், அது பர்ச்சேஸ் செய்து சரி செய்யப்பட்டுவிட்டது” என்றார். ’டிரைவர் பொண்ணு, மூணு வருச கடும் உழைப்பு.’ - பி.டி.உஷா சாதனையை முறியடித்த வித்யாவின் தாய் உருக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/minister-nirmal-kumar-predicts-that-the-dmk-admk-and-bjp-will-face-the-next-election-together




