திருச்சி, சுதந்திரதின விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சுதந்திர தினத்தை சீர்குலைக் கும் சதி செயலில் மர்ம ஆசாமிகள் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்புபிரிவு போலீசார் ரெயில் நிலைய வளாகம், வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். போலீஸ் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினார்கள். இதேபோல் பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tight-security-measures-are-in-place-at-major-railway-stations-for-the-independence-day-celebrations




