யூடியூப் நிறுவனம் தனது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு YouTube Partner Program தகுதி விதிகளில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிகளின்படி, விளம்பரங்கள் மற்றும் யூடியூப் பிரீமியம் மூலம் வருமானம் ஈட்ட புதிய படைப்பாளிகள் கடுமையான இலக்குகளை எட்ட வேண்டியிருக்கும். புதிய அறிவிப்பின்படி, புதிய படைப்பாளிகள் கடந்த ஓராண்டில் 8,000 மணிநேரப் விவ்ஸ் (Watch hours) பெற்றிருக்க வேண்டும் அல்லது 90 நாட்களில் 20 மில்லியன் ஷாட்ஸ் (Shorts) விவ்ஸ் கடந்திருக்க வேண்டும். இவை இரண்டும் தற்போதுள்ள 4,000 மணிநேரப் விவ்ஸ் மற்றும் 10 மில்லியன் ஷாட்ஸ் விவ்ஸ் என்ற அளவுகோல்களை விட இரண்டு மடங்காகும். YouTube Monetization அதேவேளையில், குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்கள் (Subscribers) இருக்க வேண்டும் என்ற விதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இருக்கும் படைப்பாளிகளுக்கும் இந்த புதிய விதி பாதிப்பை ஏற்படுத்தும். ஷாட்ஸ் வீடியோக்கள் மூலம் தொடர்ச்சியாக விளம்பர வருமானம் பெற, அவர்கள் 90 நாட்களில் 10 மில்லியன் ஷாட்ஸ் விவ்ஸ் தக்கவைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த இலக்கைக் தவறவிடும் சேனல்கள் Long-form videos மூலம் தொடர்ந்து பணம் சம்பாதிக்கலாம். மீண்டும் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஷாட்ஸ் வருமான பகிர்வு தானாகவே தொடங்கிவிடும். ஷாட்ஸ் வீடியோக்களுக்கான தகுதிகளைக் கடினமாக்கினாலும், சிறிய சேனல்கள் பணம் ஈட்ட யூடியூப் மாற்று வழிகளை உறுதி அளித்துள்ளது. யூடியூப் ஷாப்பிங் (YouTube Shopping) போனஸ்கள், பிராண்ட் கூட்டாண்மைக்கான சலுகைகள் மற்றும் புதிய டிரெண்டுகளைத் தொடங்கும் படைப்பாளிகளுக்கான சிறப்புச் சலுகைகள் போன்ற கூடுதல் வருமான வழிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. youtube அதே சமயம், யூடியூப் பார்ட்னர் புரோகிராமின் குறைந்தபட்சத் தகுதி நிலை (Fan-funding tier) மாற்றமின்றி அப்படியே தொடர்கிறது. 500 சந்தாதாரர்கள், 90 நாட்களில் 3 வீடியோக்கள் மற்றும் 3,000 மணிநேரப் வீவ்ஸ் அல்லது 3 மில்லியன் ஷாட்ஸ் வீவ்ஸ் வைத்திருக்கும் படைப்பாளிகள், Fan-funding மற்றும் ஷாப்பிங் டூல் மூலம் தொடர்ந்து பணம் ஈட்டலாம். ஆனால், இந்தத் தளத்தில் விளம்பர வருமானம் கிடைக்காது. பொதுவெளியில் பதிவேற்றப்பட்ட Long-form videos விவ்ஸ் மட்டுமே 8,000 மணிநேரக் கணக்கில் சேர்க்கப்படும். அதேபோல ஷாட்ஸ் ஃபீடில் பெறப்பட்ட விவ்ஸ் மட்டுமே ஷாட்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிரைவேட் (Private), அன்லிஸ்டெட் (Unlisted) அல்லது நீக்கப்பட்ட வீடியோக்களின் பார்வைகள் இதில் சேர்க்கப்பட மாட்டாது. மேலும், யூடியூப் நிறுவனம் தனது Premium Lite சேவையை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து, படைப்பாளிகளுக்கான கூடுதல் சந்தா வருமானத்தையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது. எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta & Youtube; '6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு' - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/technology/key-aspects-youtube-creators-need-to-know




