செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்து அமலுக்கு வந்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நடைபெற்று வந்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான மக்கள் குறைதீர் கூட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் வழக்கமாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். அப்போது பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரடியாக சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளிப்பார்கள். இந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெரும் பெட்டி வைக்கப்பட உள்ளது. அதில் பொதுமக்கள் தங்களுடைய புகார்களை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-of-maduranthakam-by-election-chengalpattu-district-public-grievance-redressal-camp-temporarily-suspended




