சென்னை, புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடும் எதிர்ப்பு தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு, சென்னை-பட்டினப்பாக்கத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில், புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை, சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் வெளியிட்டார். இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டம் இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி இன்று (செப். 29ஆம் தேதி) மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னதாக முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் புதிய தலைமை செயலகம் அமையவுள்ள பகுதியை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காததால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க மீனவ மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீஸ் குவிப்பு பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermen-protest-against-the-construction-of-the-new-secretariat-police-deployed-in-pattinapakkam




