மயிலாடுதுறை, மயிலாடுதுறை அருகே கருவாழக்கரையில் அமைந்துள்ள 18 கைகளுடைய ஸ்ரீ மகாலட்சுமி துர்கா தேவி ஆலயத்தில் குத்து விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. விளக்கு பூஜை மயிலாடுதுறை அருகே கருவாழைக்கரை கிராமத்தில் காவேரி வடக்கு பகுதியில் மகா சதா சிவ பீட வளாகத்தில் ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலட்சுமி துர்கா தேவி (18 கைகளுடைய மகாலட்சுமி துர்கா தேவி) ஆலயம் உள்ளது. இங்கு ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், நோய் நொடி நீங்கவும், பில்லி சூனியங்கள் நீங்கவும் இந்த பூஜை நடைபெற்றது. இதையொட்டி அஷ்ட தசபுஜ பீடாதிபதி சுவாமிநாதன் சிவாச்சாரியார் தலைமையில் மணிகண்ட சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்தார். சிவபுரம் வேத பாடசாலை மாணவர்கள் வேதபாராயணம் செய்தனர். பின்னர் சுமங்கலி பெண்கள் சுமார் 180 பேர் குத்துவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு தாலி கயிறு, குங்குமம், வளையல்கள், ஜாக்கெட் துணி, பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/mayiladuthurai-thiruvilakku-puja-at-the-mahalakshmi-durga-devi-temple




