சென்னை, சென்னையில் 3, 5-ந் தேதிகளில் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரேஷன் பொருட்கள் வினியோகம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது வினியோக திட்ட பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அக்டோபர் மாதத்தில் நாளை மற்றும் 5-ந் தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் உள்பட 19 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆயிரத்து 346 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ration-goods-to-be-distributed-door-to-door-in-chennai-on-the-3rd-and-5th




