டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை மாற்றிய சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 67 வயதான ஆர்தர் லெய்ன் லண்டீன் என்ற பயணி, விமானப் பணியாளர்கள் மற்றும் சக பயணிகளை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும் விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்களின்படி, லண்டீன் விமானத்தில் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவரைத் தாக்கியதாகவும், அவரது கழுத்தைப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. அவரைத் தடுக்க முயன்ற பெண் பயணி ஒருவரும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் விமானத்தில் பயணித்த ஓய்வுபெற்ற அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த உதவினர். பயணி ஒருவர் கூறுகையில் விமானத்தில் நிலவிய அமைதியான சூழல் திடீரென கூச்சல் மற்றும் குழப்பமாக மாறியது. விமானப் பணியாளர் ஒருவர் முதலில் லண்டீனைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், அவர் மேலும் ஆக்ரோஷமடைந்ததார். நிலைமை கட்டுக்குள் வந்த பின், விமானப் பணியாளர்கள் வழங்கிய டைகள் மற்றும் நெகிழ்வான பொருட்கள் கொண்டு அவரைக் கட்டி வைத்தனர். பின்னர் லண்டீன் முதல் வகுப்பு இருக்கையில் அமர வைக்கப்பட்டு, டேப்பைப் பயன்படுத்தி அவரது தலை மற்றும் உடல் பகுதி இருக்கையுடன் கட்டி வைத்தனர். லெய்ன் லண்டீன் நிலைமையைத் தொடர்ந்து, விமானம் பால்டிமோர் நகருக்குத் திருப்பிவிடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியதும் லண்டீன் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் மற்ற பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர் விமானப் பயணத்தில் வன்முறை மற்றும் கட்டுப்பாடற்ற நடத்தைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது. சம்பவத்துக்குப் பின்னர் வேலை இழப்பு லண்டீன் அரிசோனாவின் டக்சன் நகரைச் சேர்ந்த Long Realty நிறுவனத்தில் ரியல் எஸ்டேட் முகவராகவும் முன்னாள் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்த்துள்ளார். சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்தவுடன், அவருடனான நிறுவனத் தொடர்பை உடனடியாக முடித்துக்கொண்டதாக Long Realty தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/trending/american-airlines-passenger-was-duct-taped-gets-fired-from-arizona-realty-firm




