சென்னை, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாட்டை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் பதிலடி அளித்தார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும், அதனைத் தடுக்க காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கடும் மோதல் இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தின் உரிமைகளை பறித்தது பாஜக அல்ல, காங்கிரஸ்தான் என குற்றம்சாட்டி, கச்சத்தீவு, அவசரநிலை, காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டினார். மேலும், மாநில உரிமைகள் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி இல்லை என்றும் அவர் விமர்சித்தார். இதனை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் மற்றும் மாணிக்கம் தாகூர் இடையே எக்ஸ் பக்கத்தில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இருவரும் அடுத்தடுத்து பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக தமிழகத்திற்குச் செய்த துரோகங்களை மூடிமறைக்க இப்படி ஒரு தப்பியோடும் அறிக்கையா? எனவும் என்ன சார் இது நியாயமா? எனவும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- இது நியாயமா? என்ன சார் இது நியாயமா? தமிழகத்திற்குச் செய்த துரோகங்களை மூடிமறைக்க இப்படி ஒரு தப்பியோடும் அறிக்கையா நயினார் நாகேந்திரன்? கடந்த 12 ஆண்டுகளாக நீங்கள் அரசியல் பழிவாங்கலுக்காக உருட்டிய 'நேஷனல் ஹெரால்டு' புகாரை டெல்லி நீதிமன்றம் (Rouse Avenue Court) தூக்கி எறிந்துவிட்டதே, அது உங்களுக்குத் தெரியுமா? ED தாக்கல் செய்த புகாரை விசாரணைக்கே ஏற்க மறுத்து நிராகரித்துள்ளது நீதிமன்றம். இன்றுவரை எந்த ஒரு குற்றச்சாட்டோ, கிரிமினல் வழக்கோ நிரூபிக்கப்படாத நிலையில், இன்னும் எதை வைத்துப் பேசுகிறீர்கள்? இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்' (MGNREGA) ஆன்மாவையே மொத்தமாகக் கொன்றுவிட்டு, அதற்குப் பெயர் மாற்றம் செய்து 'VBGRAM' என நாடகமாடுவது வேடிக்கையாக உள்ளது. மத்திய-மாநில நிதிப் பகிர்வை 90:10 என்ற விகிதத்திலிருந்து 60:40 ஆக மாற்றி, தமிழகத்தின் மீது கூடுதலாக ரூ.5,000 கோடி நிதிச் சுமையைச் சுமத்துவதுடன், கிராமப்புற ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கும் இந்தத் திட்டம் "மகாத்மா காந்தியை இரண்டாவது முறை கொல்வதற்குச் சமம்!" இதுதான் நீங்கள் கூறும் 'அனைவருக்குமான வளர்ச்சியா'? மறைமுக எமர்ஜென்சி கடந்த காலத்தைப் பற்றிப் பேசும் நீங்கள், 2015-ல் அருணாச்சல பிரதேசம் முதல் 2026-ல் தமிழ்நாடு வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை கலைக்க முற்பட்டதை நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள், இதற்கு பெயர் 'மறைமுக எமர்ஜென்சி'. கவர்னர் மாளிகைகளை அரசியல் அலுவலகங்களாக மாற்றிவிட்டு கூட்டாட்சி தத்துவத்தைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழகம் கொடுக்கும் வரிப் பணத்தில் 29 பைசா மட்டுமே திரும்ப வருகிறது என்பது அதிகாரப்பூர்வ நிதித்துறை தரவு! இதை பொய் என்று மறுக்க உங்களால் முடியுமா? இதுதான் 'ஊழலற்ற' லட்சணமா? பக்தி என்ற போர்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் தினமும் ரூ.6-8 லட்சம் காணிக்கை பணம் திருடப்பட்டதாக SIT விசாரணையில் அம்பலமாகியுள்ளதே, இதுதான் உங்களின் 'ஊழலற்ற' லட்சணமா? தற்போதைய CAG அறிக்கைகள் அம்பலப்படுத்திய துவாரகா எக்ஸ்பிரஸ்வே, ஆயுஷ்மான் பாரத் முறைகேடுகள் பற்றிப் பேச ஏன் நா எழவில்லை? 'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' கதைகளைப் பேசி தப்பிக்கப் பார்க்காமல், தமிழகத்திற்கு இழைக்கப்படும் தொடர் நிதி அநீதிக்கும், ராமர் கோவில் கொள்ளைக்கும் முதலில் பதில் சொல்லுங்கள்! மாநில சுயாட்சியைத் துண்டாட நினைக்கும் உங்கள் அதிகார மிரட்டல்களுக்கு அஞ்சாமல், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், கூட்டாட்சி தத்துவத்தைக் காக்கவும் காங்கிரஸ் பேரியக்கம் என்றும் தார்மீகத் தகுதியோடு, சமரசமற்ற தன்மானக் குரலாய் என்றும் ஒலிக்கும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-sir-is-this-fair-is-this-a-statement-to-cover-up-betrayals-manickam-thakur-strongly-criticizes-bjp




