சென்னை, இந்த படத்தின் டிரெய்லர் நாளை மாலை 06.00 மணியளவில் வெளியாகும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். டிரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 10-வது படத்தில் புதிய கூட்டணி 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'ரெட்ரோ' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படமாக ‘டோரதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையில் “டோரதி” கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், 'பேட்ட' திரைப்படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மற்ற அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அதே நேரத்தில், தனது படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அல்லது பின்னணி இசையை முக்கிய காட்சிகளில் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது முதன்முறையாக, முழு திரைப்படத்திற்கும் இளையராஜாவையே இசையமைக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ‘டோரதி’ திரைப்படம், வருகிற 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையல், இந்த படத்திலிருந்து ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் வெளியாகி கவனத்தை பெற்றன. டிரெய்லர் அப்டேட் இப்படம் வெளியாகி இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்யும்படி, இதன் டிரெய்லர் குறித்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்தின் டிரெய்லர் நாளை மாலை 06.00 மணியளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். டிரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/karthik-subbaraj-releases-the-trailer-update-for-the-movie-dorothy




