புதுடெல்லி, ஆப்பிள் வாலட் செயலியில் தகுதியான கார்டை சேர்த்து, வங்கி கேட்கும் சரிபார்ப்பு நடைமுறைகளை முடிக்க வேண்டும். கடைகளில் என்.எப்.சி வசதியுடன் கூடிய பணப்பரிவர்த்தனை மெஷின் (Contactless POS) இருந்தால் ஐபோனை வைத்து பணம் செலுத்தலாம். ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான பணப்பரிவர்த்தனை சேவையான ஆப்பிள் பே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தி கடைகள், செயலிகள் மற்றும் இணையதளங்களில் பணம் செலுத்த முடியும். எந்த வங்கியின் கார்டுகளை பயன்படுத்தலாம்? இந்தியாவில் தொடக்கத்தில் ஆக்சிஸ் வங்கி வழங்கும் விசா மற்றும் மாஸ்டர் கார்டு கிரெடிட் கார்டுகள் மட்டுமே ஆப்பிள் பே -யில் பயன்படுத்த முடியும். எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பிற முக்கிய வங்கிகளுடனும் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், அந்த வங்கிகளின் கார்டுகளுக்கும் அனுமதி கிடைக்கும் எனத்தெரிகிறது. யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியுமா? ஆப்பிள் பேவுக்கு யுபிஐ வழியாக பரிமாற்றம் செய்யும் வசதி இடம்பெறவில்லை. தற்போது கிரெடிட் கார்டு அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகளைப் போல நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தும் வசதி ஆப்பிள் பே-யில் இல்லை. எந்தெந்த சாதனங்களில் பயன்படுத்தலாம்? ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றில் ஆப்பிள் பே பயன்படுத்த முடியும். மேக் சாதனங்களுக்கான சப்போர்ட் விரைவில் வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. எப்படி பயன்படுத்துவது? ஆப்பிள் வாலட் செயலியில் தகுதியான கார்டை சேர்த்து, வங்கி கேட்கும் சரிபார்ப்பு நடைமுறைகளை முடிக்க வேண்டும். கடைகளில் என்.எப்.சி வசதியுடன் கூடிய பணப்பரிவர்த்தனை மெஷின் (Contactless POS) இருந்தால் ஐபோனை வைத்து பணம் செலுத்தலாம். ஒருவேளை ஐபோன் தொலைந்துவிட்டால் லாஸ்ட் மோட் -ஐ செயல்படுத்துவதன் மூலம் அந்த சாதனத்தில் ஆப்பிள் பே தானாக முடக்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதனால் பயனர்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் நிலை உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/apple-pay-launch-in-india-how-to-use-it




