விருதுநகர், காட்டுத்தீ விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மலையின் கீழ் பகுதியை நோக்கி பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் காற்றின் வேகம் திசை மற்றும் சூழலை கண்காணிக்கும் பணியிலும் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிலவும் தீ பரவும் சூழல் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடியதை கருத்தில் கொண்டு நிலைமை பாதுகாப்பானதாகவும், இயல்பானதாகவும் மாறும் வரை இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லை மேலும் தொடர்ந்து எரியும் தீ மற்றும் களநிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று காலை 8 மணிக்கு முன்னதாக பக்தர்கள் அல்லது பார்வையாளர்கள் சதுரகிரி மலைப்பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. நுழைவு நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை அப்பகுதியில் நிலவும் தீ மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை பொருத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் இன்று சதுரகிரிக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். காட்டுத்தீயின் தன்மையைப் பொறுத்து நாளை ஆடி அமாவாசை அன்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-fire-ban-on-devotees-visiting-sathuragiri-hill




