நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நடந்து வரும் போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் முறைகேடு தொடர்பாக விரைவு கோர்ட்டு அமைத்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அவர் உறுதி அளித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சரவையும் கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இன்று நள்ளிரவு தனது போராட்டத்தை அதிகாரபூர்வமாக முடித்துக் கொண்டார். சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். வாங்சுக் போராட்டம் முடித்துக்கொண்டது பற்றி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே கூறியிருப்பதாவது; `நாட்டின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளார். சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டதால் நிம்மதி அடைகிறோம். அவரின் அசாதாரண தைரியத்திற்கும், தியாகத்திற்கும் நன்றி. நாட்டின் மனசாட்சியை சோனம் வாங்சுக் தட்டி எழுப்பியுள்ளார் சோனம் வாங்சுக்கின் உயிர் நம் தேசத்திற்கு மிகவும் முக்கியமானது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை அமைதி போராட்டம் தொடரும்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/cockroach-janata-firm-peaceful-protest-to-continue-until-dharmendra-pradhan-resigns




