சென்னை, ஆம்ஸ்ட்ராங்கின் இலக்குகளை விசிக வென்றெடுக்கும் என வன்னியரசு தெரிவித்தார். குத்துச்சண்டை மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் ஒரு முக்கிய பட்டியலின மற்றும் சமூக அரசியல் செயல்பாட்டாளராக செயல்பட்டவர். சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், ஆரம்ப காலத்தில் விளையாட்டு மற்றும் குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் திருப்பதியில் உள்ள சட்ட கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். வடசென்னை பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், சிறந்த வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்தார். படுகொலை சென்னை மாநகராட்சிமன்றக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து அதன் தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில், விசிக சார்பாக அஞ்சலி செலுத்திய பின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களிடம் பேசியதாவது:- வீரவணக்கம் ஆம்ஸ்டார்ங் நினைவு நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாகவும் அதன் தலைவர் திருமாவளவன் சார்பாகவும் வீரவணக்கத்தை தெரிவொத்துகொள்வதாகவும். புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்து களமாடியவர் ஆம்ஸ்ட்ராங். அவருடைய நினைவையும், அவர் முன்வைத்த இலக்குகளையும் வென்றெடுப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் உறுதியாக இருக்கும். கோரிக்கை ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு அவரது மனைவி சகோதரி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வைத்துள்ள கோரிக்கைகளை முழுமையாக வென்றெடுப்பது இந்த மக்கள் அரசின் கடமையாகும். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அவர்களுக்கு துணை நிற்பதுதான் ஒரு அரசினுடைய கடமை. இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இன்றி, பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தின் பக்கம் அரசு உறுதியாக நிற்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-will-achieve-armstrongs-goals-minister-vanniyarasu-affirms




