ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம் பார்த்தபோது ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். பெண்ணுக்கு பிரசவ வலி ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதி தம்புரொட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் மனைவி ராசாத்திக்கு (வயது 35) நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர். ஆம்புலன்சில் பிரசவம்; தாயும், சேயும் நலம் இரவு 10 மணியளவில் அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது ராசாத்திக்கு பிரசவ வலி அதிகமானதால், ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டது. அங்கு அந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பார்த்த பிரசவத்தில் ராசாத்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-gives-birth-in-ambulance-both-mother-and-baby-are-doing-well




