சிங்கப்பூர், உலகிலேயே சட்டம்-ஒழுங்கு மற்றும் கணினிப் பாதுகாப்பில் உச்சகட்ட கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது. இந்நிலையில் ஐ.டி. ஒப்பந்த ஊழியரான இந்தியாவைச் சேர்ந்த ஜனார்த்தனன் தமிழ்கோவன் (வயது 42), தகவல் பாதுகாப்புத் தேர்வு எழுதுவதற்காகத் தனக்கு வழங்கப்பட்ட அரசு லேப்டாப்பை விதிகளை மீறிப் பயன்படுத்தினார். அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்ய, இந்தியாவில் இருந்த அடையாளம் தெரியாத நபருக்கு 'ரிமோட் ஆக் சஸ்' அனுமதியைச் சட்டவிரோதமாக வழங்கினார். அந்த லேப் டாப்பில் கோர்ட்டுகளின் ரகசிய வார்த்தைகள் அடங்கிய 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் இருந்தன. தரவுகள் எதுவும் திருடப்படவில்லை என்றாலும், நாட்டின் நீதித்துறை ரகசியங்களை அந்நிய நபரிடம் காட்டி ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக சிங்கப்பூர் கோர்ட்டு அவருக்கு 6 மாத சிறைத்தண் டனை விதித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/indian-it-worker-in-singapore-jailed-for-6-months-do-you-know-why




