நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டு குறித்து விகடனுக்கு எக்ஸ்க்ளுசிவ் பேட்டி அளித்திருக்கிறார். நடிகை ராதா அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அம்பிகா, " சமீபத்தில் நான் சென்று பார்க்கும்போது ஏ.ஆர்.எஸ் காடர்ன் போர்ட்டை காணோம். வேறொரு பெயரில் போர்ட் இருந்தது. அதை பார்த்தப்போதே என் மூச்சி நின்றுவிட்டது. என்னால் தூங்க முடியவில்லை. பேனிக் அட்டாக் வந்த மாதிரி இருந்தது. சட்டப்படி செல்வது சென்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். நானும் அதை சட்டப்படியே எதிர்கொள்வேன். அவர்கள் செல்லும் வழிலேயே நானும் செல்கிறேன். குடும்ப உறவுகள் இனிமேல் கிடையாது. இனிமேல் அந்த சொத்துக்காக சண்டைப்போடும் இரண்டு நபர்களாகத் தான் இருப்போம். இந்த சமயத்தில் நான் விஜயகாந்த் சாரை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன். அவர் இருந்திருந்திருக்கலாம். நடிகை அம்பிகா அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார் ஏ.ஆர்.எஸ் காடர்ன் மூலம் பிரச்னை வரும், ஆனால் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என்று சொன்னார். அவர் இருந்திருந்தால் இந்தப் பிரச்னையைப் பேசி தீர்த்து வைத்திருப்பார்" என்று கண்கலங்கி பேசியிருக்கிறார். முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/actress-ambika-exclusive-interview-property-issue-with-radha




