சென்னை, விமானப் பயணத்தின்போது நடிகர் ரஜினிகாந்தை தற்செயலாக சந்தித்த நடிகை கயாடு லோஹர், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கன்னட திரைப்படமான 'முகில்பேட்டை' மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை கயா லோஹர், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்தடுத்த படங்களில் பிஸி 'டிராகன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான 'இதயம் முரளி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அடுத்ததாக ஜி.வி. பிரகாஷுடன் 'இம்மார்டல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியுடன் பயணம் இந்த நிலையில், விமானப் பயணத்தின்போது நடிகர் ரஜினிகாந்தை தற்செயலாக சந்தித்த நடிகை கயாடு லோஹர், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘சுந்தரி’ பாடல் நினைவுக்கு வந்தது அந்த பதிவில், நான் இன்னும் கனவு கண்டுகொண்டிருக்கிறேனோ என்று தோன்றுகிறது! அவருடைய தீவிர ரசிகராக இருந்து, ஒரு விமானப் பயணத்தில் ரஜினிகாந்த் சாருக்கு மிக அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. இது நடந்தது என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்த அந்தத் தருணத்திலேயே என் மனதில் 'சுந்தரி' பாடல் ஒலிக்கத் தொடங்கியது; நான் அப்படியே ஒரு கனவுலகில் மிதக்கத் தொடங்கினேன். எவ்வளவு ஒரு அற்புதமான, எதிர்பாராத தருணம். என் நாளே இனிதாகிவிட்டது. என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/seeing-rajinikanth-brought-that-song-to-mind-gayadu-lohar-moved




