நீலகிரி, நீலகிரி - பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், உணவுப் பொருட்களை ஏற்றி வந்த லாரியை ஒற்றைக் காட்டு யானை நடுரோட்டில் வழிமறித்து துரத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் காப்பகம் நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகளை காப்பகத்தை ஒட்டி, பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இவ்வழியாக, மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையோரம் உலா வரும் யானைகள் சில நேரங்களில், உணவைத் தேடி வாகனங்களை வழிமறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருவது தொடர்கிறது. ஒற்றை காட்டு யானை இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதி வழியாக நீலகிரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், லாரிகளில் கொண்டு செல்லப்படும் கரும்பு, தக்காளி மற்றும் உணவுப் பொருட்களின் வாசனைக்கு பழகிப்போன ஒற்றை காட்டு யானை ஒன்று, சாலையின் நடுவே நின்று வாகனங்களை மறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. உணவு தேடல்- வாகனங்கள் வழிமறிப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சாலையில் வந்த உணவுப் பொருட்கள் ஏற்றிய லாரி ஒன்றை அந்த யானை வழிமறித்தது. ஓட்டுநர் லாரியை பின்னோக்கி இயக்க முயன்றபோதும், யானை விடாமல் லாரியை நோக்கி முன்னேறி வந்து துரத்தியது. பின்னர் லாரியில் இருந்து கீழே விழுந்த உணவுப் பொருட்களை அந்த யானை எடுத்து சாப்பிட்டது. இந்த துரத்தல் சம்பவத்தை அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. போக்குவரத்து பாதிப்பு யானையின் இந்த செயலால் நீலகிரி - பந்திப்பூர் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. யானை வாகனங்களை மறிப்பதால் சுற்றுலாப் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அச்சமடைந்தனர். வனத்துறை எச்சரிக்கை வனப்பகுதி சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், விலங்குகளுக்கு தின்பண்டங்களோ அல்லது உணவோ வழங்கக் கூடாது என வனத்துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதர்கள் தரும் உணவுகளுக்கு விலங்குகள் பழகிவிடுவதாலேயே இது போன்ற ஆபத்தான சம்பவங்கள் தொடர்வதாகவும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-intercepted-a-lorry-on-the-nilgiri-bandipur-road-in-search-of-food



