பையப்பனஹள்ளி, பையப்பனஹள்ளியில் நேற்று தனியார் பள்ளிக்கூடம் அருகே அடுத்தடுத்து கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர். கியாஸ் சிலிண்டர்கள் பெங்களூரு பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கக்கதாசபுரா 6-வது கிராசில் உள்ள காலி இடத்தில், தகர கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு, நேற்று மதியம் திடீரென்று வெடிகுண்டு போன்ற மர்மபொருள் பலத்த சத்தத்துடன் வெடித்து, தீயும் பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பையப்பனஹள்ளி போலீசார், உடனே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களுடன் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை விசாரணையில், அந்த காலி இடம் மூர்த்தி என்பவருக்கு சொந்தமானது என்பதும், அங்கு சட்டவிரோதமாக சமையல் சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்பி கொடுத்து வந்ததும் தெரியவந் தது. இந்நிலையில், வழக்கம்போல் கியாஸ் நிரப்பியபோது திடீரென பற்றிய தீயால், சிலிண் டர்கள் வெடிகுண்டுபோல் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது தெரியவந்தது. இதில், மொத்தம் 4 சிலிண்டர்கள் வெடித்தது தெரிந்தது. இந்த விபத்தில், அதிர்ஷடவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில், அதன் உதிரி பாகங்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயிலில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது அங்கு மாணவ-மாணவிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பறிமுதல் இதற்கிடையில், சிலிண்டர்கள் வெடிகுண்டுபோல் வெடித்து சிதறி தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அந்த கொட்டகையில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள், பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியின் உரிமையாளர் மூர்த்தி மற்றும் சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பி கொடுத்தவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/gas-cylinders-exploded-near-the-school



