பிரெட் புரவுன் பிரெட் எனப்படும் பழுப்பு ரொட்டி, கோதுமையின் சத்து நிறைந்த தவிடு மற்றும் முளைப்பகுதியில் இருந்து தயாரிக்கப்படுவதால் அதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. ஆனால் வெள்ளை ரொட்டி சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுவதோடு, மாவுச்சத்து நிறைந்த எண்டோஸ்பெர்ம் பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. முக்கிய ஊட்டச்சத்து வேறுபாடுகள் நார்ச்சத்து: பழுப்பு நிற ரொட்டியில் நார்ச்சத்து அதிகம் இருப் பதால் செரிமானத்திற்கு உதவுவதோடு, வயிறு நிறைந்த உணர்வையும் அளிக்கும். வெள்ளை ரொட்டியில் நார்ச்சத்து மிக குறைவாகவே இருக்கும். கிளைசெமிக் குறியீடு: பழுப்பு நிற ரொட்டி குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாகவும் சீராகவும் உயரும். ஆனால் வெள்ளை ரொட்டி அதிக கிளை செமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் ரத்தத்தில் திடீர் சர்க்கரை உயர்வுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்துக்கள்: பழுப்பு நிற ரொட்டியில் இயற்கையாகவே வைட்டமின்கள் பி, ஈ மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. வெள்ளை ரொட்டியில் ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்டிருந்தாலும், இயற்கையான நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதில்லை. சுவை மற்றும் தன்மை: பழுப்பு நிற ரொட்டி அடர்த்தியாகவும், மெல்லுவதற்கு கடினமாகவும் இருக்கும். வெள்ளை ரொட்டி மென்மையாகவும், மிதமான சுவையுடனும் இருக்கும். கலோரிகள்: இரண்டு ரொட்டிகளின் கலோரி அளவு ஏறக்கு றைய சமமாகவே இருக்கும். இருப்பினும் எல்லா பழுப்பு நிற ரொட்டிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது உண்மையான முழு கோதுமை ரொட்டி என்பதை உறுதிப்படுத்த மூலப்பொருள் பட்டியலில் 100 சதவீதம் முழு கோதுமை மாவு அல்லது முழு தானியம் என்று குறிப்பிடப்பட் டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/white-bread-brown-bread-do-you-know-which-is-healthier




